ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளி அம்மாவாசை போன்ற நாட்களில் பல ஊர்களில் இருந்தும் இங்கு வந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். திதி கொடுப்பதற்கு முன்பு ராமேஸ்வரம் கடலில் நீராடி நீராடிவிட்டு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில் இன்று தை அமாவாசை என்பதால் இன்று காலை முதலே பல ஊர்களில் இருந்தும் பல ஆயிரம் மக்கள் ராமேஸ்வரம் கடலில் குவிந்திருக்கிறார்கள். பலரும் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் நிறைய மக்கள் வந்திருக்கிறார்கள்.
அதில் பலரும் அதிகாலையிலேயே நீராடி கடற்படை பகுதியில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தார்கள். ஒரு பக்கம் பக்தர்கள் ராமநாதசுவாமி கோவிலில்உள்ள 22 தீர்த்தக் கிணறுகளிலும் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
ராமேஸ்வரம் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.