சென்னை, நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவர், பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, தனது 4 சவரன் நகைகள் திருடப்பட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் நரையன்பட்டு தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் பாரதி என்பவர் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கும் பொதுமக்களின் உடைமைக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஊராட்சி மன்ற தலைவரே ஒரு பெண்ணிடம் இருந்து நகையை திருடியதாக வெளிவந்திருக்கும் செய்தி அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது