சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிவில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி, ஆவணி, தை ஆகிய மாதங்களில் சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிவில் திருவிழா நடைபெறுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு தைத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியதாகவும், அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விளக்கேற்றுதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து திருவிழா கொடி ஏற்றம் நடைபெற்றது. தலைமைப்பதி கொடியை ஏற்றி வைத்தார். இதனை காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்த நிலையில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததாகவும், இந்த விழா 11 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு நாளும், தினமும் காலை, மாலை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறும் என்று விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.