Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரிவலம் வந்த அண்ணாமலையார்: திருவண்ணாமலையில் வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம்

Advertiesment
கிரிவலம் வந்த அண்ணாமலையார்: திருவண்ணாமலையில்  வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம்

Mahendran

, வியாழன், 16 ஜனவரி 2025 (17:57 IST)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2-ம் நாள் திருவூடல் விழா நடக்கும் நிலையில், நேற்று இந்த விழா நடந்தது.
 
அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டதும், சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்த பின், அதிகாலை 6 மணிக்கு அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் தனி வாகனத்தில் எழுந்தருளி, நந்தியம் பெருமானுக்கு ஆசி வழங்கினார். அதன் பின்னர், திட்டிவாசலில் சூரியனுக்கு காட்சியளித்த பின்னர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதியில் 3 முறை வலம் வந்தார்.
 
அதன் பின்னர், இரவு 7.30 மணிக்கு மேல் சாமி அம்பாள் இடையே திருவூடல் உற்சவம் நடந்தது. பின்னர், பராசக்தி அம்மன் கோவிலுக்கு சென்ற அண்ணாமலையார் திருமஞ்சன கோபுரத்தெருவில் உள்ள குமரக்கோவில் சென்றார்.
 
மேலும் ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில், இன்று அதிகாலை கோவிலில் இருந்து புறப்பட்டு அண்ணாமலையார் 14 கிலோமீட்டர் தூரம்  கிரிவலம் வந்தார். அவரை வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபட்டு பிரசாதம் பெற்றனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும்! - இன்றைய ராசி பலன்கள் (16.01.2025)!