சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர். சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மிகவும் சிறப்பான அனுபவத்தை தந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில், விடுமுறை நாட்களில் மட்டும் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்காக சிறப்பு அட்டவணை முறையமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் சற்று அதிக நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, கடந்த சில நாட்களாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, பொங்கல் தினமான ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று சென்னை மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் 8 மணி வரை, மற்றும் காலை 11 மணி முதல் 5 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.