Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயண திட்டத்தை மாற்றுங்கள்.. சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புபவர்களுக்கு அறிவுரை..!

Advertiesment
பயண திட்டத்தை மாற்றுங்கள்.. சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புபவர்களுக்கு அறிவுரை..!

Mahendran

, வெள்ளி, 17 ஜனவரி 2025 (16:56 IST)
பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பும் போது தங்கள் பயணத்திட்டத்தை மாற்றிக் கொள்ளுமாறு போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாட கிட்டத்தட்ட ஒரு வாரம் விடுமுறை கிடைத்ததால், ஏராளமான மக்கள் சொந்த ஊர் சென்றார்கள். இதனால் சென்னையே கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்டது என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், திங்கட்கிழமை முதல் மீண்டும் இயல்பான பணி தொடங்க இருப்பதால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ஏராளமான மக்கள் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒரே நாளில் மொத்தமாக சென்னை திரும்பினால், தாம்பரம், பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், மாநகரப் போக்குவரத்து துறை இது குறித்து அறிவுறுத்தல் செய்துள்ளது.

19ஆம் தேதி மாலை ஒரே நேரத்தில் அனைவரும் சென்னை திரும்பினால் கடும் நெரிசல் ஏற்படும் என்றும், எனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பயணத் திட்டத்தை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அறிவுறுத்தலின் படி ஞாயிற்றுக்கிழமை மாலையில் பயணத்தை மேற்கொள்ளாமல், வெள்ளிக்கிழமை இரவு முதல் கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளை மாளிகையை தாக்க முயற்சித்த இந்தியருக்கு 8 ஆண்டு சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு..!