மதுரையில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று கோலாகலமாக நடந்தது.
மதுரை மக்களுக்கு ஆண்டுதோறும் வரும் சித்திரை திருவிழா கொண்டாட்டமான காலமாகும். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவையும், அழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தையும் காண பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் குவிகின்றனர்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வுகள்:
-
ஏப்ரல் 29 - கற்பக விருட்சம், சிம்ம வாகனத்தில் சுவாமி - அம்பாள் எழுந்தருள 4 மாசி வீதிகளில் உலா நடைபெறும்.
-
ஏப்ரல் 30 - காலை தங்கச்சப்பர உலா, இரவு பூத அன்ன வாகன வீதி உலா
-
மே 1 - காலை தங்கச்சப்பர உலா, மாலை கைலாசபர்வதம் - காமதேனு வாகன உலா
-
மே 2 - சுவாமி தங்க பல்லக்கில் எழுந்தருளல், சின்னடை தெரு, தெற்கு வாசல் வழியாக பாகற்காய் மண்டகபடியில் எழுந்தருளல்
-
மே 3 - சுவாமி - அம்பாள் இரவு தங்கக்குதிரை வாகன உலா
-
மே 4 - தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம் வீதி உலா
-
மே 5 - நந்திகேஸ்வரர், யாழி வாகன வீதி உலா
-
மே 6 - மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
-
மே 7 - மீனாட்சி அம்மன் திக் விஜயம், இந்திர விமானத்தில் எழுந்தருளல்
-
மே 8 - மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
-
மே 9 - சித்திரை திருவிழா தேரோட்டம்
-
மே 12 - கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்