சிவகங்கை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகளுடன் ஒரு அரசு பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை - மதுரை தேசிய நெடுஞ்சாலை தெற்கு மாவட்டங்களுக்கு முக்கிய பிரதான போக்குவரத்து சாலையாக உள்ள நிலையில் ஏராளமான கனரக வாகனங்களும் அவ்வழியில் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று அவ்வழியே மண்ணெண்ணெய் ஏற்றிக் கொண்டு ட்ரக் ஒன்றும், கேஸ் நிரப்பிய ட்ரக் ஒன்றும் சென்றுக் கொண்டிருந்துள்ளன. அப்போது அந்த இரு ட்ரக்குகளும், ஒரு அரசு பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி திடீர் விபத்து ஏற்பட்டது.
இதில் பயணிகள் பதறியடித்து வெளியேறிய நிலையில் சிலருக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் பேருந்து மோதியதில் ட்ரக்கில் இருந்த எரிப்பொருட்கள் கசியவில்லை. அதனால் ஒரு பெரும் விபத்து நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் சில மணி நேரங்களுக்கு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Edit by Prasanth.K