Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டுக்கு புரோட்டாவுக்கு இப்படி ஒரு புகழா? உலக அளவில் சிறந்த உணவாக தேர்வு..!

Advertiesment
புரோட்டா

Mahendran

, புதன், 9 ஏப்ரல் 2025 (10:19 IST)
தமிழகத்தில் புரோட்டாவை விரும்பாத நபர்களே இருக்கமாட்டார்கள் என்பதும், புரோட்டாவுடன் சால்னாவை குழைத்து சாப்பிடுவதில் தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவம் என்பதும் தெரிந்தது. இதனால்தான் சாலைக்கு இரண்டு புரோட்டா கடைகள் சென்னை உட்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் உள்ளன.
 
இந்த நிலையில், தமிழர்களின் விருப்பத்திற்குரிய உணவான புரோட்டா, உலக அளவில் சிறந்த சாலையோர உணவுகள் பட்டியலில் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளது. உலகின் மிகச்சிறந்த சாலையோர உணவுகள் பட்டியல் எடுக்கப்பட்ட நிலையில், இதில் 50 உணவுகள் இடம் பெற்றுள்ளன.
 
அதில் தமிழ்நாட்டின் பிரபலமான புரோட்டா ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் அமிர்தசரஸ் குல்ச்சா இடம்பெற்றுள்ளது என்பதும், 40வது இடத்தில் சோலே பத்தூரே இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
டேஸ்ட் அட்லஸ் என்ற தனியார் நிறுவனம் எடுத்த இந்த சாலையோர சிறந்த உணவுகள் பட்டியலில், அல்ஜீரியா நாட்டின் காரன்டிடா என்ற உணவு முதல் இடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சீனாவின் குவாட்டி இரண்டாவது இடத்தையும், இந்தோனேசியாவின் சியாமே மற்றும் மெக்ஸிகோவின் டாக்கோஸ் ஆகியவை முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது ஒழிப்புக்கு போராடியவர்.. குமரி அனந்தன் மறைவு குறித்து விஜய்.. முதல்வரின் முக்கிய அறிவிப்பு..!