Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தும்மல் ஏற்படுவது எதனால்? என்ன பரிசோதனை செய்ய வேண்டும்?

Advertiesment
தும்மல் ஏற்படுவது எதனால்? என்ன பரிசோதனை செய்ய வேண்டும்?

Mahendran

, திங்கள், 3 மார்ச் 2025 (18:59 IST)
நமது மூக்குக்குள் காற்றைத் தவிர வேறு எந்தப் பொருளும் சென்றால், உடனடியாக அது அதை தள்ளுபடி செய்ய முயலும். அந்த எதிர்ப்பின் வெளிப்பாடாக தும்மல் ஏற்படுகிறது. ஒவ்வாமை  என்பது தும்மலின் முக்கிய காரணமாகும்.
 
தூசி, புகை, வாசனைத் திரவியங்கள், வாகன மற்றும் தொழிற்சாலை புகை, குளிர்ந்த காற்று, ஒட்டடை, செல்லப் பிராணிகளின் முடி, காடை வெளிச்சம் போன்றவை தும்மலை தூண்டும் முக்கிய காரணிகள். கூடுதலாக, அதிக உணவு உட்கொண்ட பிறகு, திடீர் வெளிச்சம் பார்க்கும்போது கூட தும்மல் ஏற்படலாம்.
 
ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ வரை இருக்கலாம். தும்மும்போது வாய்வழியாக வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் பரவலாம். அதனால், கர்ச்சீப் அல்லது துணியால் மூக்கை மூடுவது நல்லது. மிகப்பெரும் அழுத்தத்துடன் தும்மும்போது காதுகளில் முட்டிப்போவது, சில நேரங்களில் காது சவ்வு கிழிதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
 
தும்மலுடன் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உங்களுக்கு எதை ஒவ்வாமை எனப் புரிய அலர்ஜி பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காய்கறிகளை சமைக்காமல் உண்பாதால் கிடைக்கும் பலன்கள்..!