தலைக்குச் சிறந்த அழகு முடிதான். கருமேனியாக இருப்பதற்கு வைட்டமின் B5 (பென்டோதெனிக் அமிலம்) முக்கியமானது. இது இல்லையெனில், இளநரை அதிகரிக்கலாம்.
அரிசி, கோதுமை, பருப்பு, கீரைகள், தக்காளி, பச்சைநிறக் காய்கறிகள், முந்திரி, பாதாம், பால், மீன், முட்டை போன்ற உணவுகளில் வைட்டமின் B5 அதிகம் உள்ளது. இது உணவில் உள்ள சத்துகளை ஆற்றலாக மாற்றி, முடியின் நிறம் மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இளநரையை தடுக்கிறது.
கால்சியத்துடன் சேர்ந்து கால்சியம் பென்டோதினேட் ஆக மாறி முடியின் கருமையை பேணுகிறது. இதனால், இளமையில் தலைமுடி நரைக்காமல் தடுப்பது சாத்தியமாகிறது.
மேலும் கைக்குத்தல் அரிசி, தீட்டப்படாத கோதுமை, கீரைகள், காளான், கேரட், காலி பிளவர், தக்காளி, உருளைக்கிழங்கு, ஓட்ஸ், பேரீச்சை, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றிலும், ஆட்டு இறைச்சி, ஈரல், முட்டை, மீன் முதலிய அசைவ உணவுகளை அவ்வப்போது எடுத்து கொண்டால் இளநரையை தடுக்கலாம்.