கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில், உடலை குளிர்விக்க சிறந்த பாரம்பரிய பானம் கம்பங்கூழ். இந்தக் கூழ் நம் முன்னோர்களின் அன்றாட உணவாக இருந்தது.
கம்பு, கேப்பை போன்ற தானியங்கள் சத்துக்கள் நிறைந்தவை. சுட்டெரிக்கும் வெயிலில், பசி இல்லாமல் புத்துணர்வுடன் இருக்க, காலை நேரத்தில் மோர் கலந்த கம்பங்கூழ் அருந்தலாம். இது உடல் சூட்டை குறைத்து, கொழுப்பை கரைக்கும், ரத்தத்தை சுத்தமாக்கும், மலச்சிக்கலை தீர்க்கும்.
இப்போது கூட ஆடி மாத கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கம்பில் இருக்கும் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் உடலுக்கு தேவையான சக்தியை தருகின்றன.
இதே போல, தர்பூசணி, கரும்பு சாறு, சாத்துக்குடி ஜூஸ், நன்னாரி சர்பத், பதநீர், நுங்கு ஆகியவை சாலையோரங்களில் விற்பனை ஆகின்றன. விலைச் சுலபம், சுவையும் நலம். வெயிலில் ஆரோக்கியம் தேடும் நமக்கு, இவை இயற்கையான தீர்வுகள்.