Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூக்கு கண்ணாடியை முறையாக பராமரிப்பது எப்படி? முக்கிய தகவல்கள்..!

Advertiesment
கண்ணாடி பராமரிப்பு

Mahendran

, வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (19:13 IST)
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், கண் கண்ணாடி அத்தியாவசியமான ஒன்றாகியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதைப் பயன்படுத்தி வரும் நிலையில், அதைச் சரியாக பராமரிக்க  முக்கியமான வழிமுறைகள் உள்ளன:
 
கண்ணாடிகளை பாதுகாப்பாக வைப்பது: கண் கண்ணாடியை பயன்படுத்தாத நேரங்களில் அதன் சிறப்பு உறையில் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிட்டால், கண்ணாடி பகுதி நேரடியாக மேசையை தொடாதவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
 
சரியாக அணிந்து கழற்றுவது: கண்ணாடியை கழற்றும் போது, இரண்டு கைகளாலும் பிரேமின் இரு முனைகளில் பிடித்து அகற்ற வேண்டும். ஒரே கையால் கழற்றும்போது மெல்லிய பிரேம்கள் வளைந்து போகவும், உடையும் வாய்ப்புகளும் அதிகம்.
 
தூய்மையாக பராமரிப்பு: கண் கண்ணாடிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் பயன்படுத்தும் முன் மென்மையான துணியால் நன்கு துடைத்தால், தூசியிலிருந்து பாதுகாக்கலாம்.
 
சரியான பொருத்தம்: காலப்போக்கில் கண்ணாடியின் இணைப்புகள் தளரலாம், எனவே அவற்றை அவ்வப்போது சரிபார்த்து, முகத்தில் நன்றாக பொருந்தும்படி திருத்திக்கொள்ள வேண்டும்.
 
தனிப்பட்ட பயன்பாடு: ஒருவர் பயன்படுத்தும் கண் கண்ணாடியை மற்றொருவர் அணியக் கூடாது. இதனால் அளவுகள் மாறி, உரிய நபருக்கு அணியும்போது பொருந்தாமல்  பாதிப்பு ஏற்படக்கூடும்.
 
கண்ணாடிகளை சரியாக பராமரிப்பது, நீண்ட நாள் பயன்பாட்டிற்கு உதவுவதோடு, கண்களின் பாதுகாப்புக்கும் முக்கியமானது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?