Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை மெரினாவில் உணவு திருவிழா! எல்லாம் நம்ம ஊர் ஸ்பெஷல்..! - எப்போ நடக்குது தெரியுமா?

Chennai Food Festival

Prasanth Karthick

, வியாழன், 19 டிசம்பர் 2024 (09:00 IST)

சென்னை மெரினா கடற்கரையில் உணவு திருவிழா நடைபெற உள்ள நிலையில் சுமார் 35 ஸ்டால்களில் 150+ உணவு வகைகள் இடம்பெறுகின்றன.

 

 

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் திருவிழா நாளை தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

 

இந்த உணவு திருவிழாவில் வழக்கமான பிரபல உணவுகள் மட்டுமல்லாமல் நீலகிரி ராகி களி - அவரை குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், தர்மபுரி ரவா கஜூர், கோவை கொங்கு மட்டன் பிரியாணி என தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரபலமாக உள்ள பல உணவுகள் இடம்பெறுகின்றன.
 

 

உணவு மட்டுமல்லாமல் பல்வேறு சுய உதவிக் குழுக்கள் தயாரித்த கைவினைப் பொருட்களும் விற்பனைக்கு இடம்பெறுகின்றன. உணவு திருவிழாவிற்கு வரும் மக்கள் வாகனங்களை நிறுத்த சென்னை பல்கலைக்கழகம், லேடி வெலிங்டன் கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரி வளாகங்களில் இலவச வாகன நிறுத்தகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்பேத்கர் - அமித்ஷா விவகாரம்: கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை..!