Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூலநோய் குணமாக என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?

Mahendran
திங்கள், 3 பிப்ரவரி 2025 (18:55 IST)
மூலநோய் என்பது மிகவும் கொடூரமான ஒரு நோயாக கருதப்படும் நிலையில் இந்த நோய் குணமாக என்னென்ன உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் முன்னோர்கள் கூறியது தற்போது பார்ப்போம்.
 
1. துத்திக் கீரையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம். 
 
2. கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம். 
 
3. பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம். 
 
4. முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். 
 
5.  கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். * உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
 
*6. தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும்.
 
7.  வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும். 
 
8.  கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 
9. இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 
 
10. நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப் பழம் மற்றும் வாழைப்பழம் உண்ண வேண்டும்.* 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆரோக்கியமான உயிரணுக்கள் உருவாக உதவும் மாசி கருவாடு.. ஆச்சரிய தகவல்..!

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

பெண்களுக்கு இரும்புச்சத்து குறைவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

8 வடிவ எண்களில் வாக்கிங் செல்வது நன்மையா?

அடுத்த கட்டுரையில்
Show comments