உணவை உணவாக சாப்பிடாமல் அதிக அளவு சாப்பிடுவதால் தான் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சராசரி உடலுக்கு என்னென்ன சத்துக்கள் தேவை என்பதை அறிந்து அதன்படி சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் உள்பட எந்த விதமான நோயும் வராது எனவும் கூறப்பட்டுள்ளது.
மனிதனின் உடல் தேவை மற்றும் செரிக்கும் தன்மையை பொறுத்து உணவுகளை ஏற்றுக்கொள்ளும். அந்த அளவை மீறினால் வயிறு கனமான இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். சுறுசுறுப்பாக நம்முடைய வேலைகளை தொடர முடியாது.
ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் அவசர அவசரமாக சாப்பிடுவதும் ஒன்றாகும். நேரமின்மை காரணமாக பலர் அவசர அவசரமாக மென்று சாப்பிடாமல் இருப்பது, நீண்ட நாட்கள் பதப்படுத்தி சாப்பிடுவது, சமைக்கும் காய்கறிகளை சரியாக கழுவாமல் சமைப்பது, மற்றும் சமைத்த உணவை முறையாக பதப்படுத்தாமல் வைத்திருப்பது, ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது.
வயிற்று வலி, வயிறு மந்தம் ஆகியவை தான் ஃபுட் பாய்சனின் முதல் அறிகுறி. அடுத்ததாக குமட்டல், தலைவலி, ஜுரம் ஆகியவை வரும். தீவிர ஃபுட் பாய்சன் என்றால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை ஏற்படும். எனவே இதன் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.