Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கழிவுநீர் தொட்டி மேல் உணவு சமையலா? சூரியின் உணவகத்திற்கு சீல் வைக்க கோரி புகார் மனு!

Soori Hotel

Prasanth Karthick

, செவ்வாய், 31 டிசம்பர் 2024 (10:33 IST)

பிரபல நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்கள் மதுரையின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் உணவு சுகாதாரமற்ற முறையில் சமைக்கப்படுவதாக ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.

 

 

சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் சூரிக்கு சொந்தமான உணவகங்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, திருநகர், ரிசர்வ்லைன் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சூரியின் உணவகம் மீது புகார் அளித்துள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் சூரியின் உணவகம்,அருகில் உள்ள செவிலியர் விடுதி இடத்தையும் ஆக்கிரமித்து ஷெட் அமைத்துள்ளதாகவும், செவிலியர் விடுதி கழிவுநீர் தொட்டி மேல் அமர்ந்து காய்கறி வெட்டுவது, சமைப்பது போன்ற சுகாதாரமற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
 

 

மேலும் அப்பகுதியில் அதிகமாக கரப்பான்பூச்சிகள், பெருச்சாளிகள் திரியும் நிலையில் சுகாதாரமற்ற முறையில் செய்யப்படும் அந்த உணவுகளை மருத்துவமனை நோயாளிகள் வாங்கி சாப்பிடுவது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும் என அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

 

ஆனால் இது தனிப்பட்ட விதத்தில், காழ்ப்புணர்ச்சி காரணமாக கொடுக்கப்பட்டுள்ள புகார் என்றும், ஏழைகளுக்கு தரமான உணவை குறைவான விலையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சூரி உணவகங்களை நடத்தி வருவதாகவும் உணவக நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருடத்தின் கடைசி நாளில் குறைந்தது தங்கம்.. புத்தாண்டில் எப்படி இருக்கும்?