Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம்: தடுப்பது எப்படி?

Advertiesment
Bone loss

Mahendran

, வியாழன், 24 ஏப்ரல் 2025 (19:17 IST)
இளம்வயதில் எலும்பு தேய்மானம் காணப்படுவது கவலையை ஏற்படுத்தும் நிலை. வழல்ல,ஆல  மாதவிடாய் நிறைவுக்கு பின் ஏற்படும் இந்த பிரச்சனை, இப்போது 20–30 வயதினருக்கும் பரவியுள்ளது. கழுத்து, முதுகு மற்றும் மூட்டு வலிகள் அதிகரிக்கின்றன. இதற்கான முக்கியக் காரணம், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி, கால்ஷியம் குறைவாக இருப்பதே.
 
நாம் சூரிய ஒளியைக் குறைவாகவே பெறுகிறோம். அதிக நேரம் உள்ளறைகளில், ஏ.சி. இடங்களில் வேலை செய்வது, இரவு நேர தூக்கக் குறைபாடு 
 
தவறான உணவுப் பழக்கங்களும் காரணம். அதிக உப்பு, நொறுக்குதீனி, பாக்ஸ் உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பால், கீரைகள், சிறுதானியங்கள், முருங்கைக்காய், பீட்ரூட், வெண்டைக்காய் போன்றவை மிகுந்த கால்ஷியம் கொண்டவை. எள், கேழ்வரகு போன்ற உணவுகள் சிறந்த தேர்வுகள். பிரண்டை எனும் மூலிகை எலும்பு வலிமையை பெருக்குகிறது.
 
இன்னுமொரு முக்கிய அம்சம் உடற்பயிற்சி. யோகா, நடை, விளையாட்டு போன்றவை எலும்புகளுக்கு உறுதி தரும். இன்று இளம்பெண்கள் ஒல்லியான தோற்றத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், வலுவான உடல் தான் உண்மையான அழகு. இளம்வயதில் எலும்புகளை பேணுவது, பிற்காலத்தில் நோயின்றி வாழும் அடித்தளம்!
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாரடைப்பு வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் என்ன?