கால் மூட்டுகளில் ஏற்படும் காயங்கள் காரணமாக வீக்கம், வலி உருவாகிறது. இந்த காயங்கள் மூட்டுகளில் உள்ள தசைகள், எலும்புகள், இணைபுள்ளிகள் மற்றும் இணைப்புக்கயிறுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுவாக, இரு கால் மூட்டுகளில் ஏற்படும் வலி பெரும்பாலும் கீல்வாதத்தால் வருகிறது. இது குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களை அதிகமாக பாதிக்கிறது.
கீல்வாதம் காரணமாக, கால் மூட்டுகளில் உள்ள எலும்புகளின் முனைகளை பாதுகாக்கும் இணை எலும்பு மெதுவாக பலவீனமடைந்து, காலப்போக்கில் முற்றிலும் தேய்ந்து வருகிறது. மூட்டுகளுக்குள் இருக்கும் திரவம் குறைந்து, எலும்புகள் நேரடியாக உராய்வதால் கடுமையான வலி, வீக்கம் மற்றும் நடக்கும் போது சத்தம் போன்றவை ஏற்படலாம்.
வயதாகும் போது, கீல்வாதம் அதிகரிக்கிறது. பெண்களுக்கு இந்த பிரச்சனை ஆண்களை விட அதிகம் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்
நடக்கும் போது, உட்காரும் அல்லது நிற்கும் போது மூட்டுகளில் கடுமையான வலி
காலையில் எழுந்தவுடன் மூட்டுகளில் விறைப்பு, சீராக இயக்க முடியாத நிலை
கால்மூட்டுகளின் சுற்றுவட்டாரத்தில் வீக்கம்
சில வளர்சிதை மாற்ற நோய்கள் (மெடபாலிக் டிஸ்அோர்டர்கள்), நீரிழிவு, இரும்புச்சத்து அதிகம் காணப்படும் நிலை போன்றவை கீல்வாதத்தை மேலும் மோசமாக்கும்
மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிக்கவும்
Edited by Mahendran