Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அட்ஜஸ்ட் பண்ணா அடுத்த ஹீரோயின் நீதான்! இளம்பெண்களை ஆசைக்காட்டி அனுபவித்த அசிஸ்டண்ட் டைரக்டர்!

Advertiesment
அட்ஜஸ்ட் பண்ணா அடுத்த ஹீரோயின் நீதான்! இளம்பெண்களை ஆசைக்காட்டி அனுபவித்த அசிஸ்டண்ட் டைரக்டர்!

Prasanth Karthick

, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (09:00 IST)

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசைக்காட்டி இளம்பெண்களை அனுபவித்த சினிமா உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் பலரிடையே இருந்து வரும் நிலையில், அந்த ஆசையை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல்களும் இருந்து வருகின்றன. இதுபோன்ற சினிமா ஆசை மோசடிகளில் பெரும்பாலும் சிக்குவது பெண்கள்தான். சினிமா மோசடியில் ஆண்கள் சிக்கினால் பணத்தைதான் இழக்கிறார்கள். ஆனால் பெண்கள் தங்கள் வாழ்க்கையையே இழக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் ஆந்திராவில் நடந்துள்ளது. 

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் சித்தார்த் வர்மா. இவர் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியதாக தெரிகிறது. ஐதராபாத்தில் கொண்டாபூர் பகுதியில் வசித்து வந்த அவருக்கு சமீபத்தில் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்த பெண்ணிடம் தேன் ஒழுக பேசிய சித்தார்த் வர்மா, நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க. சினிமாவுக்கு வந்தா உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. பிரபலமான நடிகையா வரலாம் என ஆசை வார்த்தைகள் காட்டியுள்ளார்.
 

 

அந்த பெண்ணும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் ஒருநாள் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட சித்தார்த், ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வருவதாகவும், அதற்கு போட்டோஷூட் எடுக்க தனது வீட்டிற்கு வருமாறும் அந்த பெண்ணை அழைத்துள்ளார். இதனால் அந்த பெண் சித்தார்த் வீட்டிற்கு சென்றபோது, சித்தார்த் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

 

முதலில் இளம்பெண் மறுத்த நிலையில், தனக்கு சினிமாவில் முக்கியமான பலரை தெரியும் என்றும், தன்னிடம் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் பெரிய ஹீரோயினாக வரலாம் என்றும் ஆசை காட்டியுள்ளார். அதனால் அந்த பெண்ணும் சித்தார்த்தின் ஆசைக்கு இணங்கியுள்ளார். அதன்பின்னர் அடிக்கடி போட்டோஷூட் என அழைத்து இளம்பெண்ணை அனுபவித்துள்ளார் சித்தார்த்.

 

ஆனால் பட வாய்ப்புகள் எதுவும் வாங்கி தராத நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீஸார் சித்தார்த்தை விசாரித்ததில், சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாகவும், அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமென சொல்லி ஏராளமான பெண்களுடன் அவர் உல்லாசமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்புல்லா தளபதி கொலை! இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் ஏவி தாக்குதல்! - பரபரப்பான போர் சூழலில் மத்திய தரைக்கடல்!