முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சலுகைகளையும், குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனால், மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. வருமானத்தில் சரிவு மட்டுமின்றி வாடிக்கையாளர்களையும் கனிசமாக இழந்து வருகிறது. இதனால், ஜியோவுக்கு நிகராக இல்லையென்றாலும், மற்ற நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், ஜியோ வழங்கி வரும் மலிவு விலை டேட்டா திட்டங்களை பற்றின விவரங்கள் பின்வருமாறு...
ரூ.49 டேட்டா ப்ளான்:
ஜியோவின் ரூ.49 டேட்டா திட்டத்தில், 28 நாட்களுக்கு 1 ஜிபி அதிவேக இண்டர்நெட், 50 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், இலவச ரோமிங், காலர் டியூன் மற்றும் மிஸ்டுகால் அலர்ட் சேவைகளும் வழங்கபப்டுகிறது.
ரூ.99 டேட்டா ப்ளான்:
ஜியோவின் ரூ.99 டேட்டா திட்டத்தில், 28 நாட்களுக்கு தினமும் 0.5 ஜிபி டேட்டா, 300 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் இலவச வாய்ஸ் கால்ஸ், இலவச ரோமிங், காலர் டியூன் மற்றும் மிஸ்டுகால் அலர்ட் சேவைகளும் வழங்கபப்டுகிறது.
ரூ.153 டேட்டா பிளான்:
ஜியோவின் ரூ.153 டேட்டா திட்டத்தில், 28 நாட்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் இலவச வாய்ஸ் கால்ஸ், இலவச ரோமிங், காலர் டியூன் மற்றும் மிஸ்டுகால் அலர்ட் சேவைகளும் வழங்கபப்டுகிறது.