Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜியோவின் ஆட்டம் க்ளோஸ்: அமேசான் எடுத்த அதிரடி முடிவு!

Advertiesment
ஜியோவின் ஆட்டம் க்ளோஸ்: அமேசான் எடுத்த அதிரடி முடிவு!
, செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (12:55 IST)
பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவெடுத்துள்ளது. இதற்காக 3,236 செயற்கைக்கோள்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. 
 
ஆம், இணைய சேவை கிடைக்காத உலகின் பல பகுதிகளுக்கு அதிவேக இண்டெர்நெட் சேவைகளை வழங்க அமேசான் ‘புராஜக்ட் குய்பர்’ என்னும் அதிரடி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. 
 
இந்த திட்டத்தின்படி, 3,236 செயற்கைக்கோள்களை பூமிக்கு அருகில் உள்ள சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்த உள்ளனர். இதன் மூலம் குறைவான நேரத்தில் அதிவேக இணைய சேவையை வழங்க முடியுமாம். 
webdunia
இந்த திட்டத்தை செயல்படுத்த ஒரு பில்லியல் டாலர் வரை செலவாகலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை சாத்தியப்படுத்தியதும், சரிவர இணையவசதி கிடைக்காத பல கோடிக் கணக்கான மக்களுக்கு இணைய வசதி எளிதாக கிடைக்கும் என அமேசான் குறிப்பிட்டுள்ளது. 
 
மேலும், அமேசான் இணைய கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்யவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. அப்படி இருக்க ஜியோவின் ஜிகா ஃபைபர் திட்டத்திற்கு கடும் போட்டியாக இது இருக்கும் என கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேனிலவில் சில்லறை தனமாக நடந்துகொண்ட கணவன்: மனைவி எடுத்த அதிரடி முடிவு!!