Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஃபர் இல்ல ஒரு மண்ணும் இல்ல... ஏமாற்றிய ஜியோ!

Advertiesment
ஆஃபர் இல்ல ஒரு மண்ணும் இல்ல... ஏமாற்றிய ஜியோ!
, புதன், 10 ஏப்ரல் 2019 (12:02 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சலுகைகளையும், குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. 
 
இந்நிலையில், ஜியோ நிறுவனம் தினமும் 25 ஜிபி டேட்டாவை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதாக செய்தி ஒன்று வெளியானது. ஜியோ பம்பர் ஆஃபர் என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியானது. 
webdunia
இந்த ஆஃபரில் தினமும் 25 ஜிபி டேட்டா 3 மாதத்திற்கு முற்றிலும் இலவசமாக வழங்கபப்டுமாம். அதாவது ஜூன் மாதம் வரை இலவசமாக தினமும் 25 ஜிபி டேட்டா பெறமுடியுமாம். இண்டஹ் ஆஃபரை பெற மைஜியோவுக்கு சென்று ஆக்டிவேட் செய்ய வேண்டும் என அந்த தகவல் வெளியானது. 
 
இதனால் வாடிக்கையாளர்கல் குஷியான நிலையில், இந்த தகவ்ல் பொய்யானது இது வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது. ரிலையன்ச் ஜியோ தரப்பில் தினமும் 25 ஜிபி டேட்டா இலவசம் என எந்த ஆதிகாரப்பூர்வ அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருடனைப் பிடிக்க சென்ற போலிஸ் – திருடனானக் கதை !