Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலவச மொபைல் சர்வீஸ்: வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு....

Advertiesment
இலவச மொபைல் சர்வீஸ்: வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு....
, திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (15:21 IST)
கேரளாவில் 100 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு மழை பெய்து வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதிக்கப்பட்டது. 
 
அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச டேட்டா, எஸ்.எம்.எஸ், டாக்டைம் ஆகியவற்றை வழங்கி உதவ முன்வந்தது. 
 
இந்நிலையில், தற்போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பாழாகிய ஸ்மார்ட்போன்களை ஹூவாய் நிறுவனம் இலவசமாக சரி செய்து வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
இது குறித்து ஹூவாய் நிறுவனம் தெரிவித்தது பின்வருமாறு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் இலவசமாக சரி செய்து தரப்படும். பலதரப்பு உதவிகள் தொடர்ந்து வருவதால், கேரளா விரைவில் பாதிப்பில் இருந்து மீண்டு விடும்.
 
மாநிலம் முழுக்க இயங்கி வரும் சர்வீஸ் மையங்களில் உதிரி பாகங்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்யும் வகையில், தொழில்நுட்ப குழுக்களை பிரத்யேகமாக நியமித்து செயல்படுத்தப்பட்டுள்ளன. 
 
வாடிக்கையாளர்கள், தங்களது சாதனங்கள் சரி செய்ய இலவச அழைப்பு எண் - 1800-209-6555 தொடர்பு கொள்ளாம். இலவச மொபைல் சர்வீஸ் ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொத்துக்காக கணவனை கட்டிப்போட்டு சூடுவைத்து கொடுமைபடுத்திய மனைவி