Publish Date: Thu, 31 May 2018 (11:08 IST)
Updated Date: Thu, 31 May 2018 (11:17 IST)
ஹானர் 7 எக்ஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஹானர் 7சி அமேசான தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.2,200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் டூயல் கேமரா வசதிளுடன் வெளியாகியுள்ளது.
மேலும், 5.99 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720x1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி / 4ஜிபி ராம் மற்றும் 32 ஜிபி / 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, 3 ஜிபி ராம் ரூ.9,999க்கும், 4 ஜிபி ராம் ரூ.11,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
13 எம்பி + 2 எம்பி டூயல் ரியர் கேமரா, 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா, எல்இடி ஃபிளாஷ் கொண்டிருக்கும். மேலும், ப்ளாக், கோல்ட், ப்ளூ ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
webdunia
Publish Date: Thu, 31 May 2018 (11:08 IST)
Updated Date: Thu, 31 May 2018 (11:17 IST)