எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு ஷுப்மன் கில், ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் அளப்பரிய பங்களிப்பு முக்கியக் காரணிகளாக அமைந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி பல சாதனைகளைப் படைத்துள்ளது.
-
ஆசியாவுக்கு வெளியே அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி.
-
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி
-
ஷுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கேப்டனாக முதல் வெற்றி
-
வெளிநாட்டு போட்டிகளில் இளம் வயதில் வெற்றி பெற்ற முதல் கேப்டன்
-
ஒரே டெஸ்ட் போட்டியில் 1000 ரன்களுக்கு மேல் சேர்த்த இந்திய அணி
-
முதல் முறையாக ஒரு போட்டியில் ஒரே வீரர் இரட்டை சதம் மற்றும் சதம் (ஷுப்மன் கில்)
எனப் பல சாதனைகளைப் படைத்துள்ளது.