Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசியக் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லையா?

Advertiesment
சாம்பியன்ஸ் கோப்பை

vinoth

, புதன், 13 ஆகஸ்ட் 2025 (08:36 IST)
ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடரை நடத்தி வருகிறது, ஆசியக் கிரிக்கெட் கவுன்சில், இதன் அடுத்த சீசன் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி பத்தொன்பதாம் தேதி வரை நடக்கவுள்ளது.

இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நடந்து முடிந்த ஆண்டர்சன் –டெண்டுல்கர் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஆனால் இளம் வீரரான யஷஸ்வி ஜெஸ்ய்வாலுக்கு வாய்ப்பளிக்கப்படாது என சொல்லப்படுகிறது. ஏனென்றால் தொடக்க வீரர்களுக்கான இடத்தில் ஷுப்மன் கில், அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூவர் உள்ளனர். அதனால் ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடமிருக்காது என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்: சுரேஷ் ரெய்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!