Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

Advertiesment
அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்!
, வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (09:06 IST)
பாகிஸ்தான் முன்னாள் வீரர் அர்ஷ்தீப் சிங் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவது குறித்து வாசிம் அக்ரம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை சமூக வலைதளத்தில் மதரீதியாக விமர்சனம் செய்யப்பட்டார்.

போட்டியில் ஆசிப் அலியின் கேட்சை முக்கியமான கட்டத்தில் அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இதனால் போட்டியின் முடிவே மாறியது. இதனை அடுத்து ரசிகர்கள் அவர் மீது கடும் கோபம் கொண்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் அவரை மதரீதியாக டுவிட்டரில் விமர்சனம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அதில் “ அவர் ஒரு இளம்  வீரர். இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட உள்ளார். ஆனால் அவரை சொந்த தேச மக்களே விமர்சிப்பது எனக்கு குழப்பமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

RCB அணிதான் காரணம்… இந்திய அணியில் தேர்வானது குறித்து தினேஷ் கார்த்திக் ட்வீட்!