Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அர்ஷ்தீப் சிங் பற்றி தவறாக விக்கிபீடியாவில் தகவல்… மத்திய அரசு சம்மன்

அர்ஷ்தீப் சிங் பற்றி தவறாக விக்கிபீடியாவில் தகவல்… மத்திய அரசு சம்மன்
, செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:22 IST)
சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை சமூக வலைதளத்தில் மதரீதியாக விமர்சனம் செய்து வருவது வருவதற்கு ஹர்பஜன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மற்றும் விராட் கோலி போன்றவர்களும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

போட்டியில் ஆசிப் அலியின் கேட்சை முக்கியமான கட்டத்தில் அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இதனால் போட்டியின் முடிவே மாறியது. இதனை அடுத்து ரசிகர்கள் அவர் மீது கடும் கோபம் கொண்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் அவரை மதரீதியாக டுவிட்டரில் விமர்சனம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அவரது விக்கிபீடியா பக்கத்தில் யாரோ அவரை பிரிவினைவாத இயக்கமான காலிஸ்தான் இயக்கத்தோடு தொடர்புடையவர் என தகவலைப் பதிவிட்டனர். இது சம்மந்தமாக மத்திய அரசு சார்பில் விக்கிபீடியா நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சர்! – பிசிசிஐ அறிவிப்பு!