Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் பழகியர்களிடம் ஆதரவு கேட்பேன்- ஓபிஎஸ்

panner selvam
, சனி, 27 ஆகஸ்ட் 2022 (21:51 IST)
முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தமது சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது,  அதிமுகவில் உள்ள அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று கூறியிருகிறேன். இதற்கு மக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது.

எம்.ஜி.ஆர் மறைந்த பின், அம்மா அணி, ஜானகி அணி என இரு அணிகளாகப் பிரிந்தது. அப்போது, நடந்த தேர்தலில் தோற்றோம். அதன்பின் தேர்தல் முடிவுக்கு முன்,  கட்சித் தலைவர்கள் இணையும் முன்பே, தொண்டர்கள் இணைந்தனர்.  அதேபோல் தற்போதுள்ள தொண்டர்க்ள் அனைவரும் இணைய வேண்டும்.

சசிகலா, டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு கேட்பீர்களா என ஒரு செய்தியாளர்  கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்,  எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் பயணித்தவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பேன் எனத் தெரிவித்துள்ளார்.  இது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிலிப்பைன்ஸில் கப்பலில் தீப்பிடித்து விபத்து. 80 பயணிகள் மீட்பு !