Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளிர் உலகக் கோப்பை போட்டிகள்… சின்னசாமி மைதானத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றம்?

Advertiesment
IPL 2025

vinoth

, புதன், 13 ஆகஸ்ட் 2025 (11:48 IST)
18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. ஆனால் அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆர் சி பி அணி நிர்வாகிகள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நகரின் மையத்தில் இருக்கும் சின்னசாமி மைதானத்தையே வேறு இடத்துக்கு மாற்றி விடலாமா என்ற அளவுக்கு விவாதங்கள் நடக்கின்றன. இந்நிலையில் பெங்களூருவில் புதிதாக மைதானம் உருவாக்குவது குறித்து கர்நாடக சட்டமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் விரைவில் நடக்கவுள்ள மகளிர் உலகக் கோப்பை தொடரில் சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த போட்டிகள் கேரளாவின் திருவனந்தபுரம் மைதானத்துக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக் கோப்பை போட்டிகளை நடத்த போலீசாரிடம் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான அனுமதியை இன்னும் சின்னசாமி மைதானத்தின் சார்பாகப் பெறவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசியக் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லையா?