இந்திய அணிக்காக சில போட்டிகள் விளையாடிய மனோஜ் திவாரிக்கு நிலையான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சர்வதேச போட்டிகளில் இருந்து விலக்கப்பட்ட அவர் ஐபிஎல் மற்றும் ரஞ்சி கோப்பை போன்ற தொடர்களில் விளையாடினார்.
அதன் பிறகு அவர் திர்ணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மந்திரியாகவும் ஆனார். அதன் பின்னர் ரஞ்சி கோப்பை தொடரில் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போது அவர் இந்தியக் கிரிக்கெட் அணியையும் மூத்த வீரர்களையும் விமர்சித்து வருகிறார். தன்னை அணியில் இருந்து நீக்கியதே தோனிதான் என்கிற ரீதியில் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் கோலியை விமர்சித்துள்ளார். அதில் “கே எல் ராகுலின் தொடக்கக் காலத்தில் விராட் கோலி அவருக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவளித்து அவரை அணியில் தொடர்ந்து எடுக்கவைத்தார். இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மட்டுமே இதுபோல பேவரிட்டிசம் செய்யாத ஒரேக் கேப்டன்” எனக் கூறியுள்ளார்.