இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார்.
தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுகிறார். இந்த ஆண்டு அவர் தலைமையேற்கும் சி எஸ் கே அணி மிகமோசமாக விளையாடி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்நிலையில் தோனி பற்றி பேசியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “தோனி போன்ற வீரர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள். அவர் விராட் கோலியை உருவாக்கினார். ரோஹித் ஷர்மாவை உருவாக்கினார். என்னையும் அவர்தான் உருவாக்கினார்” எனப் பேசியுள்ளார்.