நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ருத்துராஜ் வெளியேறிய பிறகு கேப்டன் பொறுப்பேற்ற தோனியாவது அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அணியின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது சென்னை அணி. இதன் மூலம் விளையாடிய 10 போட்டிகளில் இரண்டு மட்டுமே வென்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை அணியால் இனிமேல் எப்படியும் ப்ளே ஆஃப் செல்ல முடியாது. ஆனால் இந்த சீசனை எப்படியும் பத்தாவது இடத்தில் முடிக்கக் கூடாது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஏனென்றால் இதுவரையிலான 18 சீசன்களில் சென்னை அணி ஒருமுறைக் கூட இறுதி இடத்தில் இருந்து சீசனை முடித்ததில்லை.