எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு ஷுப்மன் கில், ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் அளப்பரிய பங்களிப்பு முக்கியக் காரணிகளாக அமைந்தது.
இந்த போட்டி ஷுப்மன் கில்லுக்குக் கேப்டனாக முதல் வெற்றி. இந்த போட்டியில் அவர் ஒரு பேட்ஸ்மேனாகவும் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தார். முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் சேர்த்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்துப் பேசியுள்ள ஷுப்மன் கில் “எட்ஜ்பாஸ்டனில் பெற்ற வெற்றி என் வாழ்நாள் முழுவதும் நான் நினைத்துப் பார்க்கும் ஒரு சந்தோஷமான வெற்றியாக இருக்கும். நான் ஓய்வு பெறும் போது என் கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு சந்தோஷமான தருணமாக இதை நினைப்பேன்” எனக் கூறியுள்ளார்.