Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்க அதப் பாத்தீங்களா..? விண்டேஜ் சிக்ஸரை ரி க்ரியேட் செய்த சச்சின்.. பூரித்துப் போன ரசிகர்கள்!

Advertiesment
நீங்க அதப் பாத்தீங்களா..? விண்டேஜ் சிக்ஸரை ரி க்ரியேட் செய்த சச்சின்.. பூரித்துப் போன ரசிகர்கள்!

vinoth

, திங்கள், 17 மார்ச் 2025 (15:45 IST)
ஓய்வு பெற்ற வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் லீக் தொடர் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் இந்திய அணி சச்சின் தலைமையில் விளையாடி வருகிறது. இந்த அணியில் ஓய்வு பெற்ற வீரர்களான யுவ்ராஜ் சிங், அம்பாத்தி ராயுடு, பதான் பிரதர்ஸ் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மாஸ்டர்ஸ் லீக் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 148 ரன்கள் சேர்த்தது.  அந்த அணியின் ட்வெய்ன் ஸ்மித் 45 ரன்களும், சிம்மன்ஸ் 57 ரன்களும் சேர்த்தனர். அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 18 ஆவது ஓவரில் இலக்கை எட்டி வெற்றிப் பெற்றது.

இந்த போட்டியில் சச்சின் 18 பந்துகளில் 25 ரன்கள் அடித்தார். அதில் அவர் பவுன்சராக வந்த பாலை அப்பர் கட் செய்து சிக்ஸருக்கு அனுப்பினார். இந்த சிக்ஸர் 2003 உலகக் கோப்பையில் அக்தர் பந்தில் அவர் அடித்த எபிக் சிக்ஸரை நினைவுப் படுத்துவதாக ரசிகர்கள் புளங்காகிதம் அடைந்து வருகின்றனர். வயதானாலும் இன்னும் சச்சின் அதே மாஸ்டர் பிளாஸ்டராகதான் இருக்கிறார் என புகழ்ந்து வியந்தோதி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாம்பியன்ஸ் கோப்பை நடத்தியதால் 860 கோடி ரூபாய் நஷ்டமா…சிக்கலில் பாகிஸ்தான் வாரியம்!