Publish Date: Sat, 10 Dec 2022 (10:00 IST)
Updated Date: Sat, 10 Dec 2022 (09:20 IST)
ரோஹித் ஷர்மா காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் அவர் பேட்டிங்கின் போதும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்புக்கு சென்ற நிலையில் ஒன்பதாவதாக வீரராக களமிறங்கினார்.
கையில் போடப்பட்ட தையலோடு, கிளவுஸை வெட்டி பேட் செய்த அவர் 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். ஆனாலும் கடைசி வரை போராடியும் அவரால் இந்திய அணியை வெற்றிப் பெறவைக்க முடியவில்லை. ஆனாலும் அவரின் போராட்ட குணத்தை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
ஆனால் அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித் ஷர்மா சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சைப் பெற இந்தியா திரும்பியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேலும் அவர் மருத்துவரை சந்தித்து கைக் காயத்தின் தன்மையை பொறுத்துதான் அவர் டிசம்பர் 14 ஆம் தேதி நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது தெரியும் என்று சொல்லப்படுகிறது.
vinoth
Publish Date: Sat, 10 Dec 2022 (10:00 IST)
Updated Date: Sat, 10 Dec 2022 (09:20 IST)