இந்தியாவுக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியிலும் பங்களதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கிய பங்களாதேஷ் அணி சிறப்பாக விளையாடிய நிலையில், 271 ரன்கள் என்ற ஸ்கோரை பங்களாதேஷ் எட்டி, இந்தியாவுக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து, பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விராட் கோலி 5 ரன்களிலும், தவான் 8 ரன்களிலும், சுந்தர் 11 ரன் -களிலும் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்
இதையடுத்து, களமிறங்கிய ஷரேயாஷ் அய்யர் 82 ரன்களும், படேல் 56 ரன்களும், ரோஹித் சர்மா 51ரன் களும் அடித்து அணியின் வெற்றிக்குப் போராடினார்.
கடைசியில் ,ஒரு பந்திற்கு 6 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், இந்திய அணியினர் ரன் எதுவும் அடிக்கவில்லை.
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன் கள் எடுத்தனர். எனவே, பங்களதேஷ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஒரு நாள் தொடரை வென்றது.
இன்றைய போட்டியில், பங்களதேஷ் அணியின் சார்பில், ஹூசைன் 3 விக்கெட்டுகளும், சாஹிப் 2 விக்கெட்டுகளும், ஹாசன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்திய அணியின் தோல்விக்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
Edited By Sinoj