Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு பந்துகூட வீசவில்லை.. பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டி ரத்து.. இன்று ஒரு செம்ம மேட்ச்..!

Advertiesment
ஒரு பந்துகூட வீசவில்லை.. பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டி ரத்து.. இன்று ஒரு செம்ம மேட்ச்..!

Siva

, வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (07:33 IST)
சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. நேற்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற இருந்தது. ஆனால் போட்டி நடைபெற இருந்த ராவல்பிண்டி மைதானத்தில் மழை பெய்ததால், ஒரு பந்தும் போடப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இருதரப்பு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
 
ஆனால், ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில் இருந்ததால், நேற்றைய போட்டி முக்கியத்துவமற்றதாக இருந்திருக்கலாம். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
 
இன்று ஒரு முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. ஆப்கானிஸ்தான் அணி, ஏற்கனவே இங்கிலாந்து அணியை வீழ்த்தி இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளது. இது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தது. 
 
இன்றும் அதே ஆச்சரியம் நிகழ்ந்தால், ஆப்கானிஸ்தான் அணி நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறலாம். அப்படி ஒரு மேஜிக் இன்றைய போட்டியில் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்கன் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி.. ஜாஸ் பட்லர் கேப்டன் பதவியை துறக்கிறாரா?