Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் விளையாடுவாரா?

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (16:33 IST)
ரோஹித் ஷர்மா காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கிய பங்களாதேஷ் அணி  சிறப்பாக விளையாடிய  நிலையில், 271 ரன்கள் என்ற ஸ்கோரை பங்களாதேஷ் எட்டி, இந்தியாவுக்கு 272 ரன்கள் இலக்காக  நிர்ணயித்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் அவர் பேட்டிங்கின் போதும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்புக்கு சென்ற நிலையில் ஒன்பதாவதாக வீரராக களமிறங்கினார்.

கையில் போடப்பட்ட தையலோடு, கிளவுஸை வெட்டி பேட் செய்த அவர் 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். ஆனாலும் கடைசி வரை போராடியும் அவரால் இந்திய அணியை வெற்றிப் பெறவைக்க முடியவில்லை. ஆனாலும் அவரின் போராட்ட குணத்தை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். 

ஆனால் அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அவர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments