Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவமனையில் ரோஹித் சர்மா – மைதானத்தில் என்ன ஆச்சு??

Advertiesment
மருத்துவமனையில் ரோஹித் சர்மா – மைதானத்தில் என்ன ஆச்சு??
, புதன், 7 டிசம்பர் 2022 (13:13 IST)
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கேட்ச் பிடிக்க முயன்ற போது இடது கட்டை விரலில் காயம்.


பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்லிப்பில் கேட்ச் பிடிக்க முயன்றபோது இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, டாக்கா மருத்துவமனைக்கு எக்ஸ்ரே எடுக்க அனுப்பப்பட்டார்.

முகமது சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரில் ரோஹித் இரண்டாவது ஸ்லிப்பில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் அனமுல் ஹக் அடித்த பந்து ரோகித்தின் கட்டைவிரலைத் தாக்கியது, உடனடியாக அவர் சிகிச்சைக்காக மைதானத்தை விட்டு வெளியேறினார், விரைவில் ஸ்கேன் செய்ய அனுப்பப்பட்டார். அடுத்த பந்திலேயே ஹக் திருப்பி அனுப்பப்பட்டார், சிராஜின் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் சிக்கினார்.

ரோஹித் இல்லாத நிலையில் விக்கெட் கீப்பரான துணை கேப்டன் கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார். பங்களாதேஷ் இன்னிங்ஸின் 39வது ஓவரின் போது, ரோஹித் மருத்துவமனையில் இருந்து திரும்பியதாக தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் தெரிவித்தனர், ஆனால் அவர் பீல்டிங் செய்ய வெளியே வரவில்லை.

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு நியூசிலாந்தின் ஒயிட்-பால் சுற்றுப்பயணத்தைத் தவிர்த்துவிட்டு இந்த ஒருநாள் தொடருக்கு ரோஹித் திரும்பினார். இந்தியா விளையாடிய எட்டு ஒருநாள் தொடரில் இந்த ஆண்டில் ரோஹித் விளையாடும் மூன்றாவது ஒருநாள் தொடர் இதுவாகும்.

அவரது கடைசி ODI தொடர் ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்தது, உலகக் கோப்பையின் காரணமாக T20 களில் கவனம் செலுத்தி அவர் மேற்கிந்தியத் தீவுகளில் மூன்று ஆட்டங்களையும், ஜிம்பாப்வேயில் மூன்று ஆட்டங்களையும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று ஆட்டங்களையும், நியூசிலாந்தில் சமீபத்திய ODIகளையும் புறக்கணித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏப்ரல் முதல் வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடக்கம்?