Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வெல்லாம் அதுக்குப் பிறகுதான்… ரோஹித் ஷர்மாவின் சிறுவயது பயற்சியாளர் உறுதி!

Advertiesment
ரோஹித் ஷர்மா

vinoth

, திங்கள், 27 அக்டோபர் 2025 (08:07 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.

ஆனால் அதற்கான சூழல் இந்திய அணியில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். இதனால் அவர் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் இது குறித்துப் பேசியுள்ளார். அதில் “2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வேண்டும் என ரோஹித் ஷர்மா திட்டமிட்டுள்ளார். அதற்குதான் அவர் இப்போது தயாராகி வருகிறார். அந்த உலகக் கோப்பைக்குப் பிறகுதான் ஓய்வை அறிவிப்பார்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேவாக்கின் முக்கியமான சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!