இந்திய அணி உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பிறகு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
உலக கோப்பை டி20 அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் போட்டியிட்டன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டே இழக்காமல் 16 ஓவர்களில் 170 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றினர்.
இதையடுத்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக அணியில் இருக்கும் சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவிக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
அந்தவகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பேனேசர் “இந்திய அணியில் கோலியை தவிர, ரோஹித் ஷர்மா, அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய சீனியர் வீரர்களும் உடனடியாக ஓய்வை அறிவிக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.