Publish Date: Sat, 29 Mar 2025 (14:57 IST)
Updated Date: Sat, 29 Mar 2025 (14:58 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவராவது ஆர் சி பி அணியின் சோக வரலாற்றை மாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த முறை முதல் இரண்டு போட்டிகளையும் கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளை வீழ்த்தி கம்பீர நடைபோடுகிறது ஆர்சிபி. இதுபற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் சேவாக் “ஒவ்வொரு முறையும் ஆர் சி பி அணி ப்ளே ஆஃப் செல்ல மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளையும் கால்குலேட்டரின் உதவியையும் நாடும். ஆனால் இந்த முறை அவர்கள் வெளிப்படுத்தும் இந்த ஆட்டத்தை தொடர்ந்தால் 8 போட்டிகளின் முடிவிலேயே ப்ளே ஆஃப் சென்று விடுவார்கள்” எனக் கூறியுள்ளார்.
vinoth
Publish Date: Sat, 29 Mar 2025 (14:57 IST)
Updated Date: Sat, 29 Mar 2025 (14:58 IST)