Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

Advertiesment
தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

vinoth

, சனி, 29 மார்ச் 2025 (13:59 IST)
ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கள் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் சேர்த்தது. அதன்பின்னர் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் மூத்த வீரரான தோனி 30 ரன்கள் விளாசி கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பைத் தந்தார். ஆனால் அணிக்கு அதிக ரன்கள் தேவைப்படும் போது தோனி முன்பாகவே இறங்கி ரன்களை சேர்க்காமல் ஏன் ஒன்பதாவது வீரராகக் களமிறங்குகிறார் என்று விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் தோனி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி பேசும்போது “தோனியை முன்வரிசையில் இறங்கி ஆட சொல்லும் தைரியம் சிஎஸ்கே அணி பயிற்சியாளர்களுக்கு இல்லை. அவர் என்ன முடிவெடுக்கிறாரோ, அதை அப்படி செயல்படுத்துகிறார்கள். நீங்கள் வெற்றி பெறதானே விளையாடுகீறீர்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!