Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷர்துல் தாக்கூர் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை… விமர்சனம் செய்த ரவி சாஸ்திரி!

Advertiesment
India Vs South Africa Test match
, சனி, 30 டிசம்பர் 2023 (07:49 IST)
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் மூத்த வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் இளம் பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். ஆவேஷ் கானின் அபாரமான பந்து வீச்சு இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டை வெல்ல உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாக இந்திய அணியின் பவுலிங் சொதப்பல்தான் என சொல்லப்படுகிறது. இந்திய அணியில் பும்ரா மட்டுமே சிறப்பாக பந்துவீசினார். அவருக்கு மற்ற பவுலர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை. ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விக்கெட்களை வீழ்த்தாததோடு ரன்களையும் வாரி வழங்கினர்.

ஷர்துல் தாக்கூர் குறித்து விமர்சனம் வைத்த முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி “ஷர்துல் தாக்கூர் ஒன்றும் குழந்தை கிடையாது. அவர் அணியின் நான்காவது பவுலர் என்பதை உணர்ந்து விளையாடவேண்டும். பும்ராவுக்கு மற்ற வீரர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்திருந்தால் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அர்ஷ்தீப் சிங்கை டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைத்து பார்க்கலாம். மேலும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களையும் பரிசோதனை செய்து பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை டி 20 கிரிக்கெட் அணிக்கு இவர்தான் புதிய கேப்டன்!