Publish Date: Fri, 15 Dec 2023 (14:09 IST)
Updated Date: Fri, 15 Dec 2023 (14:16 IST)
10 ஓவர்கள் டி10 தொடரை இந்தியாவில் அறிமுக்கப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டை ஐசிசி அறிமுகம் செய்தது.
தற்போது, ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட், பகலிரவு ஆட்டங்களாக நடக்கு ஒரு நாள் தொடர்களை காட்டிலும் டி20 தொடர் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.
அதன் வெளிப்பாடுதான் ஐபில் தொடர். இது பல நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், டி20 தொடரை விட அதிவிரைவில் விளையாடக்கூடிய 10 ஓவர்கள் டி10 தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.
அடுத்த ஆண்டு(2024) செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் இத்தொடர் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.