Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்… திடீரென விலகிய இந்திய வீரர்!

Advertiesment
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்… திடீரென விலகிய இந்திய வீரர்!
, திங்கள், 18 டிசம்பர் 2023 (09:23 IST)
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் முகாமிட்டு அங்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. டி 20 தொடர் சமனில் முடிந்த நிலையில் இப்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. அதற்காக இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தென்னாப்பிரிக்கா சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வீரர் இஷான் கிஷான் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார்.

அவருக்கு பதிலாக கே எஸ் பரத் இந்திய அணியில் இணைவார் என சொல்லப்படுகிறது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, கே.எஸ்.பரத்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்பை அணியின் முடிவால் அதிருப்தி… ஆலோசகர் பதவியில் இருந்து விலகினாரா சச்சின்?