பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் 245 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை சேர்த்தனர்.
இதையடுத்து ஹைதராபாத் அணி 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான தொடக்கம் அளித்தனர். அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் அடித்து மிகப்பெரிய சாதனை படைத்தார். அவர் பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணி 245 ரன்கள் இலக்கை இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும் போதே வெற்றி பெற்றது.
இதன் பின்னர் பேசிய பஞ்சாப் அணிக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் “நான் உண்மையிலேயே 245 ரன்கள் என்பதை நல்ல இலக்கு என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர்கள் போட்டியை இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும் போதே முடித்ததை நினைத்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. நாங்கள் ஒழுங்காக விளையாடவில்லை. சில கேட்ச்களை தவறவிட்டோம். நாங்கள் திருத்திக் கொள்ள வேண்டியது என்னவென்று பார்த்து அதை சரிசெய்துகொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.