Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

Advertiesment
இந்தியா

vinoth

, செவ்வாய், 8 ஜூலை 2025 (08:21 IST)
இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்றுள்ளன. இரு போட்டிகளுமே அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டிகளாக அமைந்துள்ளன. இதற்கு முக்கியக் காரணமாக மைதானம் மிகவும் தட்டையாக அமைக்கப்படுவதுதான் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதுபற்றி பேசியுள்ள ஆஸி அணியின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் நக்கலாக கமெண்ட் ஒன்றை அடித்துள்ளார். அதில் “நான் இந்தியா இங்கிலாந்து தொடரைப் பார்க்க வில்லை. எங்கள் அணியின் லபுஷான் வேண்டுமென்றால் பார்த்திருப்பார். ஏனென்றால் அவர்தான் இதுபோன்ற மைதானத்தில் பந்துவீச ஆசைப்படுவார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் தட்டையான மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுடன் அதை ஒப்பிட்டால் இரண்டும் வேறு விதமான விளையாட்டுகளாக தெரிகின்றன. அதனால் இந்த தொடர் மிகச்சிறப்பான ஒன்றாக இருக்கும்” என நக்கலடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!